பாரம்பரிய
சித்த மருத்துவம் -2
உள்ளடக்கம்
(1)18—சித்தர்கள்
பற்றிய விபரங்கள்,
(2)
18—சித்தர் நாடி நூலில் இருந்து
(3) அகஸ்த்திய வைத்திய முறை
(4) குரு பர்ப்பம்
(5) சித்த வைத்தியம் தனிக்கலையே (6) முடிவுரை.
|
செயற்கு
அறிய செய்வார் பெரியர் சிரியர்
செயற்கு
அரிய செய்கலாதார் :-குறள்
யாரும் செய்ய இயலாத அறியசெயல்களை செய்து
முடிப்போர் பெரியோர் என்ற குறள் கூற்றுக்கு இணங்கக் ஐம் பொறிகளை அடக்கி மனத்தினை
வெளி உலக ஆசைகளில் செல்லவிடாது தன்னுள் நோக்கி நிலையான இன்பம் நாடி அணிமாதி
செயல்களை செய்யவல்லோராகிய சித்தர் பெருமக்கள் பற்றி பார்த்து வருகிறோம்.
திருவள்ளுவநாயனார் பஞ்சரத்தினம்-500ல் பதினெட்டு
சித்தர்கள் பற்றி கிழ்கண்டவாறு கூறுகிறார்.
18 – சித்தர்கள் பற்றிய விபரங்கள் :-
சிவயோகமுத்தி
சித்திக்கச் செய்தார்
பதிணென்
சித்தர்கள் முப்புவின் பாகம் 28-வது பாடலில் பதினெட்டு சித்தர் பற்றி கூறுகிறார்.
நாம் முதல் தொகுதியில் நவசித்தர்கள் பற்றி பார்த்தோம் இனி 18-சித்தர்கள் பற்றி பார்ப்போம் 18 சித்தர்களில் சில நூல்களில் 18 – பேரின் பெயர்களுக்கு மாறுதலாக சிலசித்தர்கள்
பெயர் விடுபட்டு வேறு சித்தர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. மற்றும் பதினெண்
சித்தர்கள், வைத்தியத்திரவுகோல் முதற்பாக நாடி முகவுரை பாடலில் கிழ்கண்டவாறு
கூறப்படுகிறது.
மண்ணுலகின் மானிடர்கள் வாழவேண்டி
மகிமை பெரும் அகஸ்தியர் காக்கேயரோடு
புண்ணியர் புலிப்பாணி புலத்தியர்
போகர்
புஜண்டரொடு சட்டமுனி யிராமதேவர்
தன்மையுள்ள காலாங்கி கருவூரார்
பவந்தர்
தன்வந்திரி கலசமுனி கோரக்கர் மச்சர்
வன்மையாம் பிரமரிசி கருணானந்தர்
வாதி முதலிவர் பதினெண்பேர்
சித்தராமே
சித்தரென்றாலிவர்கள் செய்த
கிரந்த்ங்கேளு
ஜெயமாகக் காண்பதற்கு லட்ச்சங்கோடி
அத்தனையும்ம்ன்தேடியே கைமுரையாய்க்
கண்ட
அளவறிந்த பண்டிதரை யடுத்து வாங்கி
சித்தமாய் வைத்தியத் திரவுகோலில்
செப்பினேன் நாடி குறி முதற்
பாகத்தில்
எத்திசையுஞ சென்று விளங்ககவேண்டி
யேகமாம் பரமிண்நூலை வெளியிட்டேனே.
அகத்தியர்,
காக்கேயர், புலிப்பாணி, புலத்தியர், போகர், புஜண்டர், சட்டமுனி, ராமதவர், காலங்கி,
கருவூரார், பவந்தர், தன்வந்திரி, கமலமுனி, கோரக்கர், மச்சர், பிரமரிசி,
கருனானந்தர். என்றும்
பதினெண்
சித்தர்கள் என்ற தலைப்பில் 18- சித்தர்கள்
திறவுகோல் நூலில் பார்த்தோம். கருவூரார்
பலதிரட்டு -300, என்ற நூலில்
காப்புச்செய்யுளில் கடைவரியில் பாடுகிறேன் வேத்தாந்த முடிவை எல்லாம் வாணி பரை
கணேசனிரு பதத்தை பார்த்தே, என்று கூறி அடுத்தபாடலில் சித்தர் பெருமை என்பதில்,
நந்தீசர், மூலத்தீசர், அகத்தீசர், சட்டநாதர், பதஞ்சலியார், வியாக்கிரமபாதர்,
கோரக்கர், கமலமுனி, உழைக்கண்ணார், இடைக்காடர், ஜன்டிகேசர், போகர், சிவாக்கியர்,
காலாங்கி, புண்ணாக்கீசர், மச்சர், கொங்கணர், என்று வேறு 18- பேர் கருவூரார் கூறுகிற்ர்.
சித்த வைத்தியம் மாத இதழில் வந்தது
:-
1934- சென்னை மாகான சித்தவைத்திய சங்க “சித்தவைத்தியம் “
திங்கள் புதினத்தாள் தொகுதி-1 பகுதி-3 ல் வெளியான மருத்துவமும் தமிழும் என்ற கட்டுரை
தொகுப்பில் சென்னைமாகான சித்த வைத்திய சங்க அமைச்சர் வி.சிவஞனயோகி (தமிழ்
பிரமசூத்திர ஆசிரியர், கோவில்பட்டி } எழுதிய பதினெட்டு சித்தர்கள் பெயர் விபரம்
வருமாறு.
நந்தி,
அகத்தியர், திருமூலர், தேரையர், போகர், கோரக்கர், புசுண்டர், யூகிமுனி, மச்சமுனி,
புன்னாக்கிசர், சட்டைமுனி, காலாங்கிநாத்ர், தன்வந்திரி, கொங்கணர், கருவூரார்,
உரோமர், புலத்தியர், இடைக்காடர். என்று 18- சித்தர்கள் குறிப்பிடுகிறார். மற்றும் பதினெண்
சித்தர் நாடி நூலில்
18
–சித்தர்
நாடி நூலில் :-
பதினெண் சித்தர் அருளிய நாடி சாஸ்த்திரம் –
காப்பு செய்யுளில் கீழ்கண்டவாறு கூறப்படுகிறது.
பார்த்திடவே நந்தீசர் முலத்தீசர்
பண்பான அக்த்தீசர் சட்டநாதர்
கார்த்திடவே இடைக்காடர் ஜண்டிகேசர்
கனராமர் போகர்சிவ வாக்கியசித்தர்
சேத்திடவே கோரக்கர் புண்ணாக்கீசர்
சிறப்பான மச்சமுனி பூனைக்கண்னர்
வார்த்திடவே யூகிமுனி கொங்கணர் பாணி
வரரிசி மலர்ப்பாதம் காப்பாமே.
இதில்
நந்தி, திருமூலர், அகத்தியர், சட்டநாதர், இடைக்காடர், ஜண்டிகேசர், ராமர், போகர்,
சிவவாக்கியர், கோரக்கர், புண்ணாகீசர், மச்சமுனி, பூனைக்கண்ணர், யூகிமுனி,
கொங்கணர், பாணி, வரரிஸி என்றுகூறப்பட்டு உள்ளது. பதினெட்டு சித்தர்கள் பற்றி
மாறுபட்டு கூறப்பட்டு உள்ளது. இவர்கள் சங்கம் அமைத்து அதில் ஒருகாலத்தில் ஒரு
சிலரும் வேறொரு சமயத்தில் வேறு சிலரும் அங்கதினராக் இருந்து இருக்கலாம் அல்லது
நூல் பதிப்பினர் சித்தர் பெயர்களில் வெளியிட்ட இடைச் சொருகலாகயிருக்கலாம்.இது
பற்றி “வைத்திய கலாநிதி “ பத்திரிகையில் ஆயுர்வேத பண்டிட் டி.கோபாலாச்சாருலு
அவர்கள் 1914-ல் எழுதிய கட்டுரையை பார்ப்போம்.
அகஸ்த்திய வைத்தியமுறை : -
தமிழ் நாட்டில்அகஸ்திய வைத்தியம் என்று
ஒருவகையான சிகித்ஸ முறை வழங்கப்பட்டு வருகிறது. இது ஆர்ஷம், தாந்திரிகம் என்கிற
இரண்டுவித முறைகளும் கலந்ததாகக் காணப்படுகிறது, ஆர்யர்களுடைய தாந்திரீக முறைகளைப்
போலவே இவ்வகஸ்திய முறையிலும் சிவன் பார்வதிக்கு வைத்திய சாஸ்திரங்களை முதலில்
உபதேசித்தாகக் கூறப்பட்டு உள்ளது. பிறகு பார்வதியானவள் நந்திகேச்வரனுக்கும், நந்தி
கேச்வரன் அஸ்வனி தேவதைகளுக்கும், அவர்கள் விச்வதேவர்களுக்கும், விச்வதேவர்
அகஸ்த்தியர்-புலத்தியர்-புலத்தியர்-தேரையருக்கும்,தேரையர்- யுகிமுனிக்கும் இந்த
தந்திரத்தை முறையே உபதேசித்ததாகவும் தெரியவருகிறது.
இந்த உபதேச பரம்பரையும் ஒவ்வொரு கிரந்ததிலும்
ஒவ்வொரு விதமாக சிறிது வித்தியாசப்படுகிறது. அகஸ்த்திய வைத்திய முறைக்கு
பிரவர்த்தகர்களாயிருந்தவர்கள், பதினெண் சித்தர்கள் என்றும், சம்ஸ்கிருத தாந்திரிக
நூல்களில் பிரசித்தமாகக் கூறப்பட்டு இருக்கும் அகஸ்தியர், நந்திகேச்வரர்,
தன்வந்திரி முதலிய சித்தர்கள் மாத்திரமின்றி சட்டமுனி, புசுண்டர், கருவூரார்,
தேரையர், திருமூலர், போகர், கொங்கணர், இடைக்காட்டார், முதலான வேறு சில சித்தர்
உண்டென்றும் இச்சட்டமுனி முதலியோர், சமஸ்கிருதம் அறியாத தமிழ்யோகிகள் என்றும்
அறிகிறோம். இவ்வைத்திய முறைக்கும் பிரவர்த்தர்கள் (48) சித்தர்கள் என்று சிலரும், (21) என சிலரும் கூறுக்கின்றனர். ஆனால் (18) பதினேட்டுபேர் முக்கியமானவர்கள் என்று அனைவரும்
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்த சித்தர்களில் சிலர் ஆர்ஷசம்பிரதாயத்தை
அனுசரித்து நூல்கள் இயற்றியதால், அவர்கள் வடதேசத்திய முறையைப் பின்பற்றியவர்கள்
என்றும், வேறு சிலர் பிரத்தியோகமாய் தென்தேசத்தில் மற்றொரு வித வைத்திய முறையை
பின்பற்றி நூல்கள் இயற்றியதால் அவர்கள் தென்தேசத்திய சம்பிரதயிகள் என்றும்
விவரிக்கப்பட்டனர். இவ்விதம் வைத்திய முறையில் சிலவகுப்புகள் ஏற்ப்பட்டதால், ஆர்ஷ
வைத்திய முறையைத் தவிர்த்து தென் தேசத்திய வைத்திய முறை உண்டென்றும் அதுவே
இத்தேசத்திய தாந்திரிக சிகித்சா முறை என்றும் கூறப்படுவதாய் தெரியவருகிறது.
தென் தேசத்தில் அகஸ்திய மகிரிசியானவர் ஸ்ரீ
ராமர் வருவதற்கு முன்னமே வாசம் செய்து வந்ததானது அனைவரும் அறிந்த விஷயம்.
அப்பொழுது அவ்விடத்தில் எவ்விதமான வைத்திய முறைகள் வாழங்கப்பட்டு வந்ததோ
தெரியவில்லை. ஆனால் அகஸ்திய மகரிசியானவர் ஆர்ஷவைத்திய முறையைப் பின்பற்றி வைத்திய
நூல் இயற்றியவர் என்பது சம்ஸ்கிருத ஆயுர்வேத கிரந்தங்களில் விசிதமாகக்
கூறப்பட்டிருக்கிறது. அகஸ்தியர் தென்னிந்தியாவிற்கு வந்தபோது அவ்விடத்திய
ஜனங்களுக்கு விசேசமான சில அரிய வைத்தியசாஸ்திரங்களை உபதேசித்ததாலேயோ, அல்லது
அங்குள்ளவர் வழங்கி வந்த வைத்திய முறைகளை ஒருவாறு சீர்த்திருத்தியதாலேயோ, அல்லது
வேறு எதோ காரணத்தினாலேயோ, இந்தமுறைக்கு அகஸ்த்திய முறை என்ற பிரசித்தி உண்டாயிற்று
என்று நினைக்கிறேன்.
இந்த முறையைப் பின்பற்றியவர்களால் அனேகம்
வைத்திய நூல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுள் தேரையர் எழுதிய கிரந்தங்கள்
மிகவும் பிரசித்தி என்று அறியப்படுகின்றது. சில சித்தர்கள் ச்மஸ் கிருதத்திலுள்ள
ஆயுர்வேதக் கிரந்தங்களைத் தமிழில் அவ்விதமே எழுதி, அவைகளில் இருப்பது போலவே தைலம்,
கசாயம், லேகியம் முதலிய ஒளசத முறைகளை நிருமித்து இருக்கின்றனர். தாந்திரிக முறைகள்
மட்டும் தமிழ் தேசத்திய பிரத்தியோகமான ஒருவித சம்பிரதாயத்தைக் கொண்டே
இயற்றப்பட்டவைகளாகும். வடமொழியில் தாந்திரிக வைத்தியப் பிரவர்த்தகர்களான சோமநாத
சித்தர் முதலியவர்களால் ரஸார்ணவம் முதலிய கிரந்தங்களில் வழங்கப்பட்டுள்ள வைத்திய
பரிபாசைகள், தமிழ் வைத்திய நூல்களில் காணப்படவில்லை. லோகங்களையும் தாதுவர்க்கங்களையும்
கொண்டு செய்யப்படும், பஸ்மம், ஸிந்தூரம், திராவகம் முதலிய பற்பல முறைகள்
வடமொழியிலுள்ள இரஸ சாஸ்த்திர சம்பிரதாயங்களை விட வேறுபட்டவைகலாயிருக்கின்றன. தமிழ்
முறைகளின்படி லோகம் முதலியவற்றை பஸ்ம,ஸிந்தூராதிகளாக எளிதில் செய்துவிடலாம்.
ஜெயநீர், சில சாரங்கள், உப்புக்கள் இவற்றைப்
பாதாள எந்திரத்தின் உதவியால் பூமிக்குள் சிலகாலம் அடக்கம் பண்ணிவைத்து ஒருவித
திராவகம் செவதுண்டு இதனால் இறக்கப்படும் திராவகத்திற்கு, ஜயநீர் என்று பெயர் வழங்கப்படுகிறது இந்த
ஜெயநீரைக் கொண்டு கெளரி பாசானம், சங்க பாசானம் முதலியவற்றிற்கு ஒருவித் சுறுக்கு
கொடுப்பதுண்டு அதனால் அவ்வித இரசவர்க்கங்கள் அக்கினியில் பறந்து விடாமலிருக்குமாறு
அவற்றை கட்டுவதும் வாடிக்கை, ஜெயநீரால் பக்குவம் செய்யப்பட பாசானம் முதலானவற்றை
அனுப்பானம் கலந்து வாதரோகம் சந்நிபாதம் முதலிய தீவிரமான ரோகங்களில் உபயோகித்து
வருகின்றனர்
. வடமொழியில் உள்ள ஆயுர்வேத நூல்களில்
கூறப்பட்டுள்ளபடி அப்பிரகத்தை நூற்றுக்கணக்கான புடங்களிட்டால் தான் அதில் உள்ள
சந்திரிகை என்கிற மினுமினுப்பு போகும். ஆனால் அகஸ்த்திய (சித்த) சம்பிரதாயத்தை
அனுசரித்து நாய் புகையிலையின் சுரசத்தினால் தான்யாப்பிரகத்தை அரைத்து பத்து அல்லது
பண்ணிரண்டு முறை புடம்போட சந்திரிகை இல்லாமல் சுத்த பஸ்மமாக ஆய்விடுகிறது.
இவ்விதம் பக்குவம் செயப்படும் அப்ரேகபஸ்மத்திற்கு வீரியமும் அதிகமாயிருப்பதாகத்
தெரிகிறது.
குருபர்ப்பம் :-
பற்பல மூலிகைகளைச் சேர்த்து மயில் துத்தததை
வித்யாதரயந்திரத்தில் பக்குவம் பண்ணி மிகவும் வெண்மையான பஸ்மம் செய்யப்படுவதுண்டு
இது குருபஸ்மம் என்று வழங்கப்படுகிறது. அகஸ்த்திய சம்பிரதாயக்காரர்கள் கட்டு
மருந்து என்றும் சொல்லுகிறார்கள் இதை மிகவும் சிறிய அளவில் ஒன்று அல்லது இரண்டு
வேளைக்கு மேல் உபயோகிப்பது இல்லை. இவ்விதம் மிகவும் சிறந்த நூற்றுக் கணக்கான
முறைகள் அகஸ்த்திய வைத்திய ரீதியாய் உண்டு. இவ்வித தமிழ் முறையை அனுசரித்து
சிகிச்சாகிரமங்கள் தென்தேசத்திலும் சிம்ஹத்தீவு என்ற இலங்கையிலும்,
சிங்கப்பூரிலும், பர்மாவிலும் இப்பவும் வழங்கப்பட்டு வருகின்றன. பொளத்த மதஸ்தர்கள்
அரசாண்ட காலத்தில் இந்த வைத்திய முறை இவ்விதமாக வியாபித்தாய் அறிகிறோம்.
இந்த சம்பிரதாயத்த்தின் மூலபுருசரான
அகஸ்த்தியரால் ஆயுர்வேத ஸூத்திரங்களுக்கு பாஷ்யமும் எழுதப்பட்டதாகக்
கேள்விப்படுகிறோம். அகஸ்த்தியர் ஆயுர்வதம்-1200, இது பன்னீராயிரம் கிரந்தங்கள் (வட மொழியில் 32
எழுத்துக்கள் அடங்கியது ஒரு கிரந்தம்
என்று சொல்லப்படுகிறது ) அடங்கியதாகும். இந்த நூலில் இத்தேசத்தில் உன்டாகக்கூடியவையும்
சமஸ்கிருத நிகண்டுகளில் கூறப்படுவையுமான அநேக ஒளஷதிகள் குணங்கள்
வர்ணிக்கப்படுகின்றன. அகஸ்த்திய வைத்தியம் அறுநூறு, அகஸ்தியர் பரிபூரணம் நாநூறு
அகஸ்த்தியர் வைத்தியகாவியம்ஆயிரத்திஐநூறு, அகஸ்தியர்சிந்துரம் முன்நூறு,
இன்நூல்களெல்லாம் தமிழ் வைத்திய முறையில் சிறந்தவையாம். ஆர்சம் என்கிற ஆயுர்வேத
முறைகளை அனுசரித்தும் இவர் சிலகிரந்தங்கள்
செய்து இருப்பதாகக் கேள்வி. புலிப்பாணி ஐநூறு, போகர் எழுநூறு, யூகிமுனி ஆயிரம்,
ரோமரிஷி ஐநூறு, என்கிற சில கிரந்தங்களும் வேறு பல மகான்களாலும் இயற்றப்பட்டு
இருக்கின்றன. ஆயுர்வேத ஸூத்திரங்களுக்கு வியாக்கியானம் எழுதிய யோகனந்தரும் தமிழ்
வைத்திய முறைப்படி கிரந்தங்கள் இயற்றிய சித்தர்களில் ஒருவர் என்று தெரியவருகிறது.
தமிழில் இவ்விதமான பண்டைக் காலத்திய வைத்திய நூல்கள் புதிது புதிதாக வெளியாய்
வருகிறது.
தன்வந்திரி, அகஸ்த்தியர் முதலானவர்கள்
அகஸ்த்திய வைத்திய சம்பிரதாயத்திற்கு பிரவர்த்தனர்களாகக் கருதப்படுகின்றனர்.
இவர்களே ஆர்ஷ வைத்திய பிரவர்த்தனர்களகவும் ஆகிறார்கள். ஆனால் இவ்விசயங்க்களை நன்கு
விளக்குவதற்கு ஏற்ற சரித்திரங்கள் கிடைக்கவ்ல்லை. ஆகையால் மேற் கூறியவர்களில்
அல்லது அவர்களுடைய நூல்களில் முந்தியவை, பிந்தியவை என்கிற விஷயம் சாத்தியமானதாக
இல்லை. இதில் சிறந்த வைத்திய சம்பிரதாயப்படி இயற்றப்பட்ட கிரந்தங்கள் கிடைப்பது
மிகவும் துர்பலமாயிருப்பதாலும், கிடைக்கக் கூடிய கிரந்தங்கள் கேவலம், புதிர் போன்ற
மிகவும் சிக்கலான சங்கேத வாக்கியங்களும் உவமை முதலிய பற்பல அலங்காரங்களும் அடங்கிய
வைகலாகக் காணப்படுகின்றன, முன்பின் விரோதமில்லாமல் விசயவிசாரம் செய்வதற்கு ஏற்ற
சம்பிரதாய சித்தமான அறிவிற் சிறந்த ஞானிகள் அறிதாயிருப்பதாலும்
அவ்விசயங்களுக்குள்ள பரஸ்பர ஒற்றுமை அல்லது வேற்றுமைகளையும் பற்றிய முறைகளை
விமர்சனம் செய்வது மிகக்கடினம், ஆகிலும் எமது புத்திக்கு எட்டிய வரையில் தமிழ்
வைத்திய நூல்களை ஆராய்ச்சி செய்ததாலும் அவ்வைத்திய முறைகளைக் கையாளும் வைதியர்களுடைய
அபிப்பிராயங்களைக் கொண்டு தாந்திரிக சிகிச்சை முறைகளைப் பார்க்கிலும் அகஸ்த்திய
வைத்தியமுறை அநேகவிதத்தில் வேறுபட்டதாகவே தோன்றுகிறது.
அகஸ்த்திய வைத்திய சம்பந்தமான
கிரந்தங்களிலுள்ள பரிபாசை பிரயோகங்கள் தாந்திரிக கிரந்தங்களில் கானப்படாமலிருப்பதே
இதற்க்கு போதுமான பிரமானமாகும். வெகு நாட்களாகவே தமிழ்ப் பாஷையானது அபிவிருத்தியடைந்து வந்தது இதற்க்காக
சிலசங்கங்களும் இருந்தன. இந்த பாசையில் அநேகக வேதாந்த கிரந்தங்களும் உண்டு
தென்னிந்தியாவில் விவகரிக்கப்படும் ஆந்திர,கர்நாடக, திராவிட பாசைகளும் இத்தமிழ்
பாசை ஒன்றுதான் சம்ஸ்கிருத பாசையின் உதவியின்றியே பெரும்பாலும் சுதந்திரமான
ஒருமாத்துரு பாசையாக இருக்கின்றதென்று சரித்திர ஆராச்சியாளர்கள்
எழுதியிருக்கின்றார்கள்.இவ்விதம் சுதந்திர பாசையான இதில் பிரத்தியோகமாய் பல
வைத்திய நூல்கள்ஏற்ப்பட்டிருப்பதால், அவை எல்லாவற்றினையும் ஆதியோடந்தமாய்
ஆராய்ச்சி செய்யாமல் இவ்வைத்திய முறையில் ஒருவித முடிவான அபிப்பிராயம் கூறுவது
சாத்தியமில்லாத விசயமாகும்.
ஆதியில் சரக ஸுசுராதி மகரிஷிகள் இயற்றிய
வைத்திய நூல்களில் கேவலம் மூலிகைகள் அல்லது ஒசதிகளைக் கொண்டே ஒளஷத முறைகள்
கூறப்படுவதாலும், அவ்விதம் மூலிகைகளையே பிரதானமாகக் கொண்ட வைதிதிய முறை ஆர்சம்
என்றும், பிறகு நாகார்சுனான் முதலிய சித்தர்களால் இயற்றப்பட்ட தந்திரங்கள் என்கிற
வைத்திய கிரந்தங்களில் பெரும்பாலும் இரசவர்க்கங்க்களும் உலோகங்களுமே ஒளஷத
முறைகளில் உபயோகிக்கப்பட்டதால் அவ்வித சிகிசா முறை தாந்திரிகம் என்று கூறப்படும். :- பண்டிட் கோபாலாச்சார்லு,
மேற்கண்டவாறு
(1914) ஆயுர்வேத பூசன் பண்டிட் கோபால் ஆச்சாலு
போன்ற மிகப்பெரிய ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்துக்களில் இருந்தே சித்தமருத்துவம் வேறுபட்டது என்று
அறியப்படுகிறது. இக்கருத்தை வலியுறுத்தக் காரணம் இந்தியாவில் தமிழ்நாடு,
பாண்டிச்சேரி தவிர்த்த மற்றமாநிலங்களில் ஆயுர்வேதமே நிலைகொண்டுள்ளது. இதை மருத்துவ
ஆய்வுக்கமிட்டி (சோப்பரா கமிட்டியார்) நாடு முழுவதும் விசாரணை செய்து
அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில் இந்நாட்டு வைத்தியம் என்பது
ஆயுர்வேதமும், யுனானியும்ந்தான், என்பாதாக கூறி விட்டு சித்தமருத்துவம் என்று
ஒன்றில்லை எதோ வழக்கில் சிலர் பயன்படுத்துகின்றனர் என்று அறிக்கை
சமர்பித்துவிட்டனர் இவ்விதம் அறிக்கையில் கானப்பட்டதைக் சித்தவைத்திய சங்கங்களை
அங்கமாக கொண்டு இருக்கும் தமிழ் நாடு சித்தவைத்திய யூனியன்னுடைய பெருமுயற்சியால்
சோப்பராக் கமிட்டியுடன்வாதிட்டு நமது சித்தவைத்தியத்தை பற்றி எடுத்து சொல்லி
சித்தவைத்தியம் தமிழ் நாட்டுக்குரிய
தனித்தன்மையுடையது என்பதை நிலைநாட்டினர் இதற்கெல்லாம் ஆயுர்வேதத்தை கொண்டுள்ள
பார்ப்பனியத்தின் சூழ்ச்சி என்பதுவே உண்மை காலங்காலமாக தமிழையும், தமிழனையும்,
பண்பாடு, கலை இலக்கியம், மொழியில் ஊடுருவல் என்பது இல்லாமல் மருத்துவத்திலும்
திட்டமிட்ட ஆரியத்தின் செயல் சிந்திக்கவேண்டியது தமிழ் சமுதாயம் அறியவேண்டியது
அவசியம் (1952- may-2 ) அமுது மருத்துவ
இதழில் வந்தவிபரம் தெரிவிக்கப்படுகிறது மற்றும் சித்தயோகி சுந்தர மகாலிங்கம்
அவர்களின் அமுதுவில் எழுதிய “சித்த வைத்தியம் தனிக்கலையே” என்ற கட்டுரையில் கூறியுள்ளதையும் தமிழ்
சமுதாயத்தினர் ஆரியத்தின் ஊடுருவல்களையும்
சந்தர்ப்பவாதச் செயல்களையும் தந்தை பெரியாரின் அறிவார்ந்த சிந்தனைகளுமே
தமிழ்நாட்டில்(சித்தர்கள், புத்தர்,மகாவீரர்,கபிலர், இராமலிங்கர் தாயுமானவர் போன்ற
ஞாநிகளுடைய மறைமுக எதிர் குரல்களை உள்வாங்கிக் கொண்ட ஆரியம்) நிலைகுலைந்தது என்பது
சிந்திக்கவேண்டியது.
சித்த வைத்தியம்
தனிக்கலையே :-
இயற்கையில் பூமியில்
விளையும் பச்சை வட்டுக்கள் (வடமொழி பாசானங்கள்) முப்பத்திரண்டும், அது தவிர
“பரங்கி” என்பவன் வைத்து எடுத்து செய்த செயற்கை
முறை முப்பத்திரண்டும் ஆக பச்சைவட்டுக்கள், 64 என்று
சித்தவைத்தியம் கூறுக்கிறது. இந்த பச்சை வட்டுக்களை வைத்த பரங்கி தமிழனே,
பரங்கிமலை, பரங்கிப்பட்டை, பரங்கிக்காய், பரங்கிப்பேட்டை என்றும் தமிழ் நாட்டில்
இப்பெயர்கள் சர்வசாதாரனமாய் வழங்கி வருகிறது. மேலும் சூடன், பச்சைக்கர்ப்பூரம்,
துருசு, சீனம் முதலியவைகளைச் சித்தவைத்தியர்கள் சுயேச்சையாய் தங்கள் தேவைக்கு
இன்றைக்கும் செயற்கை முறையில் வைத்து எடுத்துக் கொள்கிறார்கள். சமீபத்தில் நடந்த
யுத்தம் (இரண்டாம் உலகப்போர்) காரணமாய் இரசம், நவச்சாரம் முதலியன் அதிகமாய்
விளையேறிய காரணத்தால், நாம் உப்பிலிருந்து இரசமும், மற்றும் சிலசேர்க்கையால்
நவச்சாரமும், துருசு, சீனம் முதலியன செய்து கொண்டோம்.
தமிழ் நாட்டில்
வெடியுப்பும் பல இடங்களில் காய்ச்சுகிறார்கள், வடநாட்டிற்கு இங்கு இருந்துதான்
போகிறது. எனவே வைப்புச்சரக்குகள் உண்டுபன்னுவதிலும் சிதவைத்தியர்கள்
கைதேர்ந்தவர்கள். மற்றும் 1926- டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி சென்னை மெடிக்கல்
காலேஜில் பேராசிரியர் பி. சி. ரே அவர்கள் பழைய கால இந்திய ரசாயனம் என்பதை பற்றி
நடத்திய சொற்பொழிவில் பின்வருமாறு கூறியுள்ளார். தென்னிந்தியாவில் ரசாயன சாஸ்திரம்
வைத்திய முறையோடு இணைந்துள்ளது ஆயுர்வேதம், யுனானி இவைகள் அல்லாத தென்னிந்தியாவில்
சித்தர் என்று அழைக்கப்படும் ஒரு தனி வைத்தியமுறை இருக்கிறது. அந்தத்தமிழ் வைத்திய
சாஸ்த்திரங்களில் ரசாயனமும், வைத்தியமும் இணைக்கப்பட்டு இருக்கிறது இதனால் சித்த
வைத்திய சாஸ்திரங்களை ரசாயன சாஸ்திரிகள் ஆராய்ச்சி செயும்படியான மிகச்சிறந்த
ஆசையைத்தரத்கக் கூடியதுமாக அமைந்து
இருக்கிறது.
மற்றும் அமுது மாத இதழில் “சித்தவைத்தியம்” என்ற தலைப்பில் கோவை சி.கே.
குமாரசாமிபிள்ளை, பதினெட்டு சித்தர்கள் பற்றி எழுதியது சித்தர்கள் பலர்
அக்காலத்திலேயே ஓர் சங்கம் ஏற்ப்படுத்தி அச்சங்கத்தில் செயற்குளுவினர் 18- பேர் எனவகுத்துக் கொண்டனர் போலும்.
அதனால்தான் பதினெண் சித்தர்கள் என்று வழங்கி வருகிறது எனகருதுகிறேன். இதற்குச்
சான்றுகள் சித்தர் நூல்களில் அவர்கள் பாடிய பாடல்களே. சித்தர் வணக்கம் பாடல்களை
நோக்கினால் ஒருகாலத்தில் ஒரு சிலரும் மற்றோர் காலத்தில் வேறுசிலர் சேர்க்கப்பட்டு
சிலர் நீங்க வேறு சிலர் குறிப்பிடப்பட்டு உள்ளது காணலாம் மேலும் ஒருசித்தர் நூலை
முதலில் இருந்து கடைசிவரை படித்தால் குறித்த ஒரு பொருளைப் பற்றி விளக்கங்கள்
கூறிக் கொண்டு போய் இடையில் வேறு சித்தர் பெயர்களையும் அவர்களது நூல்களையும் பார்
எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் சட்டசபைகளில் சட்டங்கள் இயற்றப் படுவது போல்
சித்தர்கள் நூல்கள் இயற்றி விவாதித்து உள்ளனர் என்பது வெள்ளிடை மலை.
முடிவுரை:-
சங்க்காலங்களில் சங்கத்தமிழ்ப் புலவர்கள் எவ்வாறு
சங்கத்தில் பாடல் இயற்றி கருத்து விவாதங்கள்செய்தனரோ அதுபோல் சித்தர்களும் கலந்து
உறவாடி இருக்கவேண்டும். மற்றும் சித்தர்களில் சிலர் ஆரியர்களும் பிறமொழி
ஆதிக்கத்தினர் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதாலும் சித்த மருத்துவத்தில் அதிக
ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதாலும் மறைமொழிகளில் (பரிபாசைகள்) சில கருத்துக்களை
கூறி இருக்கவேண்டும் இராசமணி, முப்பு,வாதம், போன்றவற்றை மறைமொழி களாக
கூறினர்போலும்.இவை குறித்து சித்தர்களை கடவுள் நிலை என்ற தொகுதியில் பார்ப்போம்.
இத்தொகுப்பில்பதினெட்டு சித்தர்களைப் பற்றியும், சித்த ஆயுர்வேத மருத்துவர்களின்
கருத்துரைகளையும் பார்த்தோம். அடுத்த தொகுதியில் சித்தர்களின்
மூடநம்பிக்கை,மற்றும் பார்பனிய எதிர்கூவல் செய்த சித்தர்கள் அவர்களுடைய
கருத்துக்கள் பற்றிப் பார்த்து பின்சித்தர்களின் கடவுள் நிலை, முப்பு, இராசமணி,
வகாரம் போன்றவற்றை பார்ப்போம் என்று கூறிமுடிக்கிறேன்
No comments:
Post a Comment